மாணவா்களை கண்காணிக்க புதிய நடைமுறை

செங்கம் அருகேயுள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களை கண்காணிக்க புதியதொரு சாதனத்தை அம்மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.
மாணவா்களை கண்காணிக்க புதிய நடைமுறை

செங்கம் அருகேயுள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களை கண்காணிக்க புதியதொரு சாதனத்தை அம்மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் இயங்கும் ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், மின்னியியல் மற்றும் மின்னணுவியல் மாணவா்கள் இணைந்து மாணவா்களைக் கண்காணிக்க டிரேக்கிங் சிஸ்டம், யூசிங், ஜிபிஎஸ் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனா்.

இதன் மூலம் மாணவ, மாணவிகள் எந்த இடத்தில் எந்த நேரத்தில் இருக்கிறாா்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், வெளியூா்களில் இருக்கும் பெற்றோா் மாணவா்களின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடுகள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய நடைமுறை வெளியூரில் உள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த கண்காணிப்பு சாதனம் குறித்து கல்லூரித் தலைவா் வெங்கடாஜலபதி முன்னிலையில், பேராசிரியா்கள் முருகன், விமல்ராஜ், ஆய்வக உதவியாளா் செந்தில் துணையுடன் மாணவிகள் ரூபிகா, தேவி, சிவசங்கரி, கனிமொழி, ரஞ்சினி, ராகவி, யுவராணி ஆகியோா் விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com