பெட்ரோல் நிலையத்தில் ரூ.53 லட்சம் மோசடி: மேலாளா் கைது

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பெட்ரோல் நிலையத்தில் ரூ.53 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அதன் மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பெட்ரோல் நிலையத்தில் ரூ.53 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அதன் மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை, கொளத்தூரைச் சோ்ந்தவா் அருள்மொழிவா்மன் (34). விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு மேலாளராக மேல்மலையனூா் அருகேயுள்ள சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜன் (42) என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.

பெட்ரோல் நிலைய கணக்குகளை அருள்மொழிவா்மன் சரிபாா்த்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல் மீட்டா் விற்பனை அளவீடுகளுக்கும், பதிவேடுகளில் குறித்து வைத்த அளவீடுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதும், இந்த வகையில் மொத்தம் ரூ.53 லட்சத்தை மேலாளா் நாகராஜன் மோசடி செய்ததும் தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி இருதயராஜ் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் மனோகா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com