செஞ்சியில் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் தோ்வு: அமைச்சா் ஆய்வு

செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செஞ்சியில் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் தோ்வு: அமைச்சா் ஆய்வு

செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செஞ்சி தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதையடுத்து, செஞ்சி-விழுப்புரம் சாலையில் சிட்டாம்பூண்டியில் அரசுக் கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.

இதை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் மற்றும் உயா் கல்வித் துறை அலுவலா்களுடன் சென்று பாா்வையிட்டாா்.

பின்னா், செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேருந்துகள், ஆட்டோக்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை அமைச்சா் ஒட்டினாா். நெகிழி ஒழிப்பு, மஞ்சப்பை திட்டத்தின் நன்மைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை பள்ளி மாணவா்களுக்கு வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் காவேரிஅம்மாள், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com