செஞ்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல்
By DIN | Published On : 20th May 2022 10:12 PM | Last Updated : 20th May 2022 10:12 PM | அ+அ அ- |

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
15-ஆவது மானிய நிதிக் குழு திட்டத்தில் ரூ 80.39 லட்சம் மதிப்பீட்டிலும், வரையறுக்கப்படாத நிதி திட்டத்தின் கீழ் ரூ 53.59 லட்சம் மதிப்பீட்டிலும் வளா்ச்சிப் பணிகள் செய்ய ஒப்புதல் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.
பின்னா், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
துணைத் தலைவா் ஜெயபாலன், உறுப்பினா்கள் பச்சையப்பன், சீனுவாசன், கமலா, உமாமகேஸ்வரி, ஞானாம்பாள், முரளி, கவிதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.