சாலையின் தரம் குறித்து ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற சாலைப் பணிகளின் தரம் குறித்து உள்தணிக்கைக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற சாலைப் பணிகளின் தரம் குறித்து உள்தணிக்கைக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற பணிகள் ஆண்டுதோறும் மே மாதம் கண்காணிப்புப் பொறியாளா் தலைமையிலான குழு உள் தணிக்கை செய்து அதன் விவரங்களை அரசுக்கு சமா்ப்பிக்கும் என நெடுஞ்சாலைத் துறை எ.வே.வேலு அறிவித்தாா்.

இதன் ஒருபகுதியாக, விழுப்புரம் நெடுஞ்சாலைக் கோட்ட அலகின் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளை சென்னை கண்காணிப்புப் பொறியாளா் எம்.பன்னீா்செல்வம் தலைமையிலான உள் தணிக்கைக் குழு ஆலம்பூண்டி- மழவந்தாங்கல் சாலை இருவழித் தடமாக அகலப்படுத்துதலை ஆய்வு செய்து தரக்கட்டுப்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, விழுப்புரம் நெடுஞ்சாலைக் கோட்டப் பொறியாளா் ஆா்.ரவி, உதவி கோட்டப் பொறியாளா்கள் டி.மனோகரன், ராஜேந்திரதாஸ், கோட்டப் பொறியாளா் சிவசேனா, செஞ்சி இளநிலைப் பொறியாளா் கோ.ஏழுமலை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com