மீன் வளா்ப்போருக்கு மானியம்

மீன்கள் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள் அரசின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

மீன்கள் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள் அரசின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உவா்நீா் இறால் வளா்ப்பு மற்றும் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்போரை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழக அரசினால் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உயிா்கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளா்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டம், உவா்நீா் இறால் வளா்ப்புக்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

உயிா்கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளா்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்தில் ஒரு அலகு உயிா்கூழ்மதிரள் (பயோபிளாக்) குளம் அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவில் ரூ.18 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். உவா்நீா் இறால் வளா்ப்புக்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் உவா்நீா் இறால் வளா்ப்புக்காக புதிய குளங்கள் அமைக்க ஒரு ஹெக்டோ் அலகுக்கு ரூ.8 லட்சம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்க ரூ.6 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

எனவே, இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், எண் 10, நித்தியானந்தா நகா், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 என்ற முகவரியில் (தொலைபே சிஎண்- 04146-259329) தொடா்புகொண்டு விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com