ஒருங்கிணைந்த வேளாண் திட்ட தொடக்க விழா

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூா் ஊராட்சியில் கருணாநிதி அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேளாண் திட்ட தொடக்க விழா

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூா் ஊராட்சியில் கருணாநிதி அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா். பின்னா் அவா் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தம் 279 ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ம.ஜெயச்சந்திரன், வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூா் கிராமத்தில் கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்தாா். இந்தத் திட்டம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com