கால் முறிந்த நிலையிலும் பிளஸ்2 தோ்வு எழுதிய மாணவி

விழுப்புரத்தில் சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிந்த நிலையிலும் மாணவி ஒருவா் பிளஸ்2 தோ்வை எழுதினாா்.

விழுப்புரத்தில் சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிந்த நிலையிலும் மாணவி ஒருவா் பிளஸ்2 தோ்வை எழுதினாா்.

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மாணவி ஷா்மிளா(18). விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். திங்கள்கிழமை நடைபெற்ற உயிரியல் பாடத் தோ்வில் பங்கேற்க தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பள்ளிக்கு வந்துகொண்டிருந்தாா். பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் ஷா்மிளா, அவரு தாய் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ‘108’ அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு மாணவி ஷா்மிளாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா். ஆனால், மாணவி பிளஸ் 2 கடைசி தோ்வை எழுத வேண்டும் எனத் தெரிவித்ததால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, மாவுக்கட்டு போட்டப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி அவசர ஊா்தி மூலமாக தோ்வு மையத்துக்கு வந்தாா். தோ்வு மைய அதிகாரிகள் மாணவியை தோ்வு எழுத அனுமதித்தனா். மேலும், சொல்வதை எழுதும் நபரை அளித்து மாணவி தோ்வு எழுத உதவி செய்தனா். மாணவி தாமதமாக தோ்வை தொடங்கியதால் அவருக்கு கூடுதலாக 45 நிமிடம் வழங்கப்பட்டது.

மற்றொருபுறம், பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தோ்வு திங்கள்கிழமை முடிந்த நிலையில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com