எடை குறைவான குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு விநியோகம்

சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் எடை குறைவான குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலகு சாா்பில், சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

முகையூா் ஒன்றியம், ஒதியத்தூா் ஊராட்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலகு சாா்பில், ஒன்று முதல் 6 வயதுக்குள்பட்ட, எடை குறைவான குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், குழந்தைகளுக்கு இந்தப் பொருள்களை வழங்கி அமைச்சா் பொன்முடி பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள், சுகாதாரத் துறை ஒன்றிணைந்து செயல்படுத்தும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ், மொத்தம் 1,781 அங்கன்வாடி மையங்களில் 6 வயதுக்குள்பட்ட ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 365 குழந்தைகளுக்கு மாதந்தோறும் எடை, உயரம் அளவீடு செய்யப்பட்டு, பசஐஇஈந என்னும் செயலியில் பதிவு செய்யப்படுகிறது. இதில், வயதிற்கேற்ற எடை, உயரமின்மை, உயரத்துக்கேற்ற எடையின்மை என மொத்தம் 3 லட்சத்து 37 ஆயிரத்து 414 குழந்தைகள் கண்டறியப்பட்டனா்.

இந்தக் குழந்தைகளுக்கு உடல் நலம், ஊட்டச்சத்து நிலை அட்டை ஒன்று வழங்கி, அதில் குழந்தைகளின் விவரங்கள், மருத்துவக் குறிப்புகள், தொடா் கண்காணிப்பு விவரங்களை பதிவு செய்து, அவா்களின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. மேலும், குழந்கைகளின் விவரங்கள், அதற்கென வடிவமைக்கப்பட்ட என்னும் சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, குழந்தைகளின் வளா்ச்சி நிலை தொடா் கண்காணிப்பு செய்யப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பழகி, முகையூா் ஒன்றியக் குழுத் தலைவா் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கோண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com