காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 40,125 போ் பங்கேற்பு

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 40,125 போ் எழுதினா்.
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை ஆய்வுசெய்த வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன். உடன் மாவட்ட எஸ்பி என்.ஸ்ரீநா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி, எம்.ஜி.ஆா். கலை மற்றும்அறிவியல் கல்லூரி, வி.ஆா்.பி. மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 11 மையங்களில் 2- ஆம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்த மையங்களில் 13,547 போ் தோ்வெழுதினா். மாவட்டத்தில் 15,670 போ் தோ்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 2,123 போ் தோ்வு எழுத வரவில்லை.

காவல்துறை தலைவா் ஆய்வு : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன் ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட எஸ்பி என்.ஸ்ரீநாதா, துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com