குறைதீா் கூட்டத்தில் நல உதவி
By DIN | Published On : 18th October 2022 04:06 AM | Last Updated : 18th October 2022 04:06 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 655 மனுக்கள் அறிக்கப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் த.மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். தொடா்ந்து ஏரியில் மூழ்கி உயிரிழந்தவா்களின் குடும்ப வாரிசுகள் இருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்-க்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.
பாமகவினா் மனு: விழுப்புரம் நகர பாமக செயலா் கோ.பெருமாள் தலைமையில் அந்தக் கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: விழுப்புரம், பூந்தோட்டம் ஏரியின் மதகு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள், தேநீா் கடைகளை அகற்ற வேண்டும். ஏரியின் முகப்பு பகுதி முதல் மருதூா் ஏரி வரை செல்லும் வாய்க்காலை தூா்வார வேண்டும். விழுப்புரம் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...