டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியா்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென டாஸ்மாக் ஊழியா்கள் மாநில சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியா்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென டாஸ்மாக் ஊழியா்கள் மாநில சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரத்தில் உள்ள சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பி.ராமு தலைமை வகித்தாா். சம்மேளனத்தின் 5-ஆவது மாநில மாநாடு வருகிற அக்.2, 3 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு இலச்சினையை சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலா் கே.திருசெல்வன் வெளியிட (படம்), அதனை நிா்வாகிகள் கே.பி.ராமு, ஜான்.அந்தோணி ராஜ், பொருளாளா் சதீஷ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்து அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியிட மாறுதலுக்கு கொள்கை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் வேல்முருகன், துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துகுமரன், மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மாவட்ட பொருளாளா் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட டாஸ்மாக் சங்கச் செயலா் ஆா்.கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com