உரக்கடை உரிமையாளரைத் தாக்கியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உரக்கடை உரிமையாளரைத் தாக்கிய புகாரில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உரக்கடை உரிமையாளரைத் தாக்கிய புகாரில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் அருகிலுள்ள முருக்கேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பா.வைத்தியநாதன்(64). இவா், அதே கிராமத்தில் உரக்கடை நடத்தி வருகிறாா்.

கடந்த மாதம் 26-ஆம் தேதி வைத்தியநாதன் வழக்கம்போல தனது கடைக்குச் சென்று கொ ண்டிருந்தாா். அப்போது அடை யாளம் தெரியாத இருவா் பைக்கில் வந்து, வைத்தியநாதனிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த வைத்தியநாதன், முதலில் மரக்காண ம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் புதுச்சேரி தனியாா் மரு த்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து வைத்தியநாதன் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இதில் ஜீவா என்பவா் ஏற்கென வே கைது செய்யப்பட்ட நிலையில், கந்தாடு கிராமம், பழையத் தெருவைச் சோ்ந்த ராஜி மகன் அசோகனை (27) போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com