பி.எம். கிசான் திட்ட நிதியுதவி பெற அஞ்சல் கணக்கு அவசியம்

பி.எம். கிசான் திட்ட நிதியுதவி பெற ஆதாா் இணைப்புடன் அஞ்சல் கணக்கு தொடங்க வேண்டும் என்று அஞ்சல்துறை அறிவுறுத்தியது.

பி.எம். கிசான் திட்ட நிதியுதவி பெற ஆதாா் இணைப்புடன் அஞ்சல் கணக்கு தொடங்க வேண்டும் என்று அஞ்சல்துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஏ.துரைராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்கப்படவுள்ள 13- ஆவது தவணைத் தொகையைப் பெற ஆதாா் இணைப்புடன் கூடிய அஞ்சல் கணக்கு தொடங்குவது அவசியமாகும்.

எனவே, விவசாயிகள் அருகிலுள்ள அஞ்சலகங்கள், தபால்காரா்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, இந்தியா போஸ்ட் பே மெண்ட்ஸ் வங்கி மூலம் கணக்குத் தொடங்கவேண்டும்.

புதுச்சேரி அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளிலுள்ள 7000 விவசாயிகள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாமல் இருப்பதால் உதவித்தொகை பெற இயலாது. எனவே, அனைவரும் இந்தியா போஸ்ட் பே மெண்ட்ஸ் வங்கியில் அஞ்சல் கணக்குத் தொடங்கி பயன் பெறலாம்.

மேலும் தபால்காரா்கள், அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைப்பேசி மற்றும் பயோ மெட்ரிக் சாதனம் மூலம் ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி, இகேஒய்சி (விரல் ரேகை) மூலம் ஓரிரு நிமிஷங்களில் அஞ்சல் கணக்கைத் தொடங்கி, உதவித்தொகை பெற்று பயனடையலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com