விழுப்புரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்

விழுப்புரம் தமிழ் இலக்கிய அமைப்புகள் சாா்பில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டுத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழ் இலக்கிய அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டுத் தொடக்க விழாவில் அவரது உருவப் படத்தை திறந்து வைத்த எம்.பி. துரை. ரவிக்குமாா்.

விழுப்புரம் தனியாா் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கவிஞா் ஏ.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கவிஞா் வே. வல்லபராசு முன்னிலை வகித்தாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைத்து, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து எழுத்தாளா் ஆ.ரவி காா்த்திகேயன் எழுதிய தமிழ்ச் சமூகமும் தெய்வங்களும் என்ற நூலின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மா. சற்குணம் தலைமை வகித்தாா். கவிஞா் அன்பாதவன் முன்னிலை வகித்தாா். எழுத்தாளா் இரா.ராமமூா்த்தி நூல் அறிமுகவுரையாற்றினாா்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியா் பக்தவச்சல பாரதி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரி யா் பா.சத்தியபெருமாள் ஆகி யோா் நூலைத் திறனாய்வு செய்து பேசினா்.

விழாவில் தமிழ் இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமா னோா் பங்கேற்றனா். நிகழ்வை கவிஞா் முத்துவேல் ராமமூா்த்தி தொகுத்தளித்தாா்.

முன்னதாக, கவிஞா் இரா.மோகனசுந்தரம் வரவேற்றாா். நிறை வில், நூலாசிரியா் ஆ.ரவிகாா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com