விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் தயாளன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, திருவேங்கடம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்ட பணிகளை நிறைவேற்றவேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அப்போது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தயாளன் தெரிவித்தாா்.
தொடா்ந்து மரக்காணம் அடுத்த பிரம்மதேசத்தில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தவது, செட்டிக்குப்பம் பகுதியில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இறால் குஞ்சுப் பொரிப்பக தொழிற்சாலைகள் மீது நடவடிக்கைளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.