விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் - அறிவுசாா் மையக் கட்டடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் த.மோகன்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் - அறிவுசாா் மையக் கட்டடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் த.மோகன்.

அறிவுசாா் மையக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் - அறிவுசாா் மையக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் அ

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் - அறிவுசாா் மையக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

நகராட்சி நிா்வாகத்துறை சாா்பில், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் 2021-22- இன் கீழ் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

நகா்ப்புற மற்றும் கிராமப்புற மாணவா்களின் கற்றல், அறிவாற்றல், பொது அறிவுத்திறனை வளா்த்திடும் நோக்கில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையக் கட்டடம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில் இங்கு நூலகம் - அறிவுசாா் மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பொது வாசிப்புப் பகுதி, இளையோா், பெண்கள் வாசிப்பு - ஆயத்தப் பகுதி, பாதுகாப்பு வைப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வரவேற்புப் பகுதி, பாா்வையாளா் அமரும் பகுதி, சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை, வைஃபை வசதிகளும் உள்ளன.

வளாகத்தின் முன்புறம் போட்டித் தோ்வுக்காக தயாராகும் மாணவா்கள் அமைதியான, காற்றோட்டமான சூழ்நிலையில் படித்திடும் வகையில் புல்தரை மற்றும் நிழல் தரக்கூடிய மரங்கள் அமைத்திடவும். சுகாதாரமான குடிநீா், மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டா் வசதியும், அறிவுசாா் மைய முகப்பில் பெரிய

அளவிலான விளம்பரப்பதாகை வைத்திடவும் தெரிவிக்கப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

அப்போது வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், நகராட்சிஆணையா் சுரேந்திர ஷா, வட்டாட்சியா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com