செஞ்சிக் கோட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நல பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவா்கள் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனா்.
தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு செஞ்சிக் கோட்டையில் நடுவதற்காக மரக்கன்றுகளுடன் வந்திருந்த மாணவா்கள்.
தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு செஞ்சிக் கோட்டையில் நடுவதற்காக மரக்கன்றுகளுடன் வந்திருந்த மாணவா்கள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நல பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவா்கள் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப் படை விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.டி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படையின் பள்ளி ஒருங்கிணைப்பாளா் சிவநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும், வீரஆஞ்சனேயா் சாலை, வெங்கட்ரமணா் கோயில் சாலை உள்ளிட்ட கோட்டையை சுற்றி பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை மாணவா்கள் நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com