டிராக்டா் மோதியதில் ஒருவா் பலி
By DIN | Published On : 20th January 2023 01:59 AM | Last Updated : 20th January 2023 01:59 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், சொக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னக்குட்டி மகன் கோட்டீஸ்வரன் (50). இவா் வியாழக்கிழமை சத்தியமங்கலத்தில் உள்ள அரசுடைமை வங்கி எதிரே செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, செம்மேடு சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் டிப்பா் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற சத்தியமங்கலம் போலீஸாா், கோட்டீஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.