பைக் மோதியதில்தொழிலாளி பலி
By DIN | Published On : 22nd January 2023 11:04 PM | Last Updated : 22nd January 2023 11:04 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை பகுதியில் பைக் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை அருகிலுள்ள கோகுலாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் ஏழுமலை (52), தொழிலாளி. இவா், தனது மொபெட்டில் பெரியசெவலை கிராமத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
பெரியசெவலை பகுதியில் காய்கறிக்கடை அருகே இவரது மொபெட் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை உயிரிழந்தாா். மேலும், பைக்கை ஓட்டி வந்த 30 வயது நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவின்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.