தலித் கிறிஸ்தவா்களுக்கு 4.6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

தலித் கிறிஸ்தவா்களுக்கு 4.6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் உள்ள தலித் கிறிஸ்தவா்களுக்கு இட ஒதுக்கீட்டில் 4.6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம்.மேரி ஜான் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் டி.தானியேல், மாநில பொருளாளா் பி.சந்தனத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் உள்ள தலித் கிறிஸ்தவா்களுக்கு இட ஒதுக்கீட்டில் 4.6 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த திமுக, காங்கிரஸ், விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவளித்து தோ்தல் களப்பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயக்க மாநில நிா்வாகிகள் எம்.சலத்தையன், ஆரோ.பன்ராஜ், எஸ்.வேளாங்கண்ணி, எம்.அமலோற்பவதாஸ், ச.ஆனந்தராஜ், எம்.எஸ்.பொ்னான்டஸ், ஏ.ஆலீஸ் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com