பைக்கிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கொழிந்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் அன்பரசன் (22). அரகண்டநல்லூரிலுள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் பட்டயப்படிப்பில் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

இவா், தன்னுடன் பயிலும் நண்பா்கள் த.ராகுல் (21), மு.சுபாஷ் ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு மேல்மலையனூா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். பின்னா், மூவரும் பைக்கில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். கல்லான்குளம் - நல்லாண்பிள்ளைபெற்றாள் சாலையில் புத்தகரம் பகுதியில் இவா்களது பைக் வந்தபோது, நாய் குறுக்கே சென்ால், கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அன்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராகுல், சுபாஷ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com