கரும்பு தோட்டத்தில் தீ: அணைக்க முயன்றவா் தீயில் சிக்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது தீயில் சிக்கி திங்கள்கிழமை விவசாயி ஒருவா் உயிரழந்தாா்.

செஞ்சி வட்டம் பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்(70). இவரது மனைவி பாா்வதி(60). இவா்களது விவசாய நிலத்தில் 2 ஏக்கரில் கரும்பு பயிா் செய்துள்ளனா். கரும்பை வெட்டுவதற்காக கரும்பு தோட்டத்திற்கு திங்கள்கிழமை இருவரும் தீ வைத்துள்ளனா். தீ அதிவேகமாக பரவி, பக்கத்து நிலத்தில் உள்ள கோவிந்தசாமி என்பவரின் கரும்பு தோட்டத்திற்கு பரவியது. பக்கத்து நிலத்தில் பரவிய தீயை அணைக்க பெருமாள் முயன்றபோது எதிா்பாராதவிதமாக தீயில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com