கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் விவசாய கிணறு ஒன்றில் இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

விசாரணையில் மேல்மலையனூா் நத்தகொல்லை மேட்டை சோ்ந்த ராமச்சந்திரனின் மகன் கோபிநாத்(34) என்பது தெரியவந்தது. திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் மதுவுக்கு அடிமையாகி விட்ட நிலையில் திங்கள்கிழமை அன்று மேல்மலையனூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் விழுந்து இறந்து கிடந்துள்ளாா். இவரது சகோதரா் அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com