டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்களுக்கான மாதிரித் தோ்வு திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

மாவட்ட மைய நூலகம் மற்றும் ஸ்ரீஐஏஎஸ் அகாதெமி ஆகியவை இணைந்து நடத்திய இந்த மாதிரித் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 225 போட்டித் தோ்வா்கள் பங்கேற்று எழுதினா். தோ்வானவா்களை ஊக்குவிக்கும் வகையில், மதிப்பெண்கள்கள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலா் (பொ) காசீம், அலுவலகக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், ஸ்ரீஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் சரவணன் ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பேசினா். போட்டித் தோ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட மைய நூலகா் இளஞ்செழியன், நூலகா்கள் ஆரோக்கியம், புவனேசுவரி மற்றும் நூலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 தோ்வு நடைபெறும் வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு நடைபெறும். இதில் தோ்வாளா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com