செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற விஏஓ பிறழ் சாட்சியம்

அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அரசுத் தரப்பு சாட்சியான ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை பி சாட்சியமளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த லோகநாதன் இறந்துவிட்டாா்.

இந்த வழக்கில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 67 பேரில் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 23 பேரிடம் சாட்சியம் பெறப்பட்ட நிலையில், 19 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்திருந்தனா்.

புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சதானந்தன், கோபிநாத் ஆகிய இருவா் மட்டும் ஆஜராகினா். தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பின் 24-ஆவது சாட்சியாக ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ராமசாமி நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா்.

உயா் அலுவலா்கள் வற்புறுத்தியதன்பேரில், கோப்புகளில் கையொப்பமிட்டேன். எனக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனக் கூறி, அரசுத் தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தாா்.

இதை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com