தந்தை, மகன் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தந்தை, மகனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே காவல் ஆய்வாளா் பாபு தலைமையில் காவலா்கள் மாா்ச் 13-ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 85 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கடத்திச் சென்ாக மரக்காணம் இ.பி. சாலையைச் சோ்ந்த நடராஜன் மகன் ரவிச்சந்திரன் (58), இவரது மகன் அரவிந்த்குமாா் (31) உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் ரவிச்சந்திரன், அரவிந்த்குமாா் ஆகிய இருவரும் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைத்தாா். இந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை அதற்கான உத்தரவை பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், அரவிந்த்குமாா் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com