பாலத்தில் படுத்திருந்தவா் கீழே விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பெருவளூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு பாலத்தின் மீது படுத்திருந்தவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், பூங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் மணிகண்டன்(43), தொழிலாளி. இவா் பெருவளூா் அருகே உள்ள மதுக் கடையில் மது அருந்திவிட்டு, அந்தப் பகுதியிலுள்ள பாலத்தில் படுத்திருந்தாா்.

மதுபோதையில் பாலத்திலிருந்து சுமாா் 5 ஆடி ஆழம் உள்ள பள்ளத்தில் மணிகண்டன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com