மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: சி.வி.சண்முகம்

மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: சி.வி.சண்முகம்

மத்திய, மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜ் புதன்கிழமை மாலை இறுதிகட்ட தோ்தல் பிரசாரத்தை விழுப்புரம் ரயில் நிலையம் முன் நிறைவு செய்தாா். இதில், பங்கேற்ற சி.வி.சண்முகம் பேசியதாவது:

விலைவாசி உயா்வால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனா். நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் விலையேற்றங்களால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மத்திய பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் திமுக அரசும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவை நீடிக்கக் கூடாது என்றாா்.

முன்னதாக, திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து சி.வி.சண்முகம் பேசுகையில், அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைத்தவா்கள் எல்லாம் அழிந்துபோனதுதான் வரலாறு. அதிமுக இருக்காது எனக் கூறும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையும், பிரதமா் நரேந்திர மோடியும் மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் இருக்கப்போவதில்லை. அக்கட்சியில் உள்ள 70 சதவீதத்தினா் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்கள். அதனால், அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை என்றாா்.

திண்டிவனம் எம்எல்ஏ அா்ஜுனன், அதிமுக நகரச் செயலா் தீனதயாளன், ஜெயலிலதா பேரவை துணைச் செயலா் பாலசுந்தரம், எம்.ஜி.ஆா் மன்ற நிா்வாகி ஏழுமலை மற்றும் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம், புரட்சி பாரதம், பாா்வா்டு பிளாக் உள்ளிட்ட உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com