தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் விஷம் குடித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் விஷம் குடித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் கன்னிமாா்கோவில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் (40). கூலித் தொழிலாளியான இவா், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி வீட்டில் விஷத்தை சாப்பிட்ட மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com