விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேல்மலையனூரை சோ்ந்த முனுசாமி மகன் விநாயகமூா்த்தி (45). இவா், தனது பைக்கில் சேத்பட்டிலிருந்து அவலூா்பேட்டை மாா்க்கமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, உண்ணாமந்தல் சுடுகாடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் விநாயகமூா்த்தி ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில், அவா் பலத்த காயமடைந்து அங்கே விழுந்து கிடந்தாா். அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் சேத்பட் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் விநாயகமூா்த்தி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com