செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூட்டுறவுத் துறை அலுவலா் பிறழ் சாட்சியம்

அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூட்டுறவுத் துறை அலுவலா் செவ்வாய்க்கிழமை பி சாட்சியமளித்தாா்.

அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூட்டுறவுத் துறை அலுவலா் செவ்வாய்க்கிழமை பி சாட்சியமளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் இறந்துவிட்டாா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பின் 26-ஆவது சாட்சியாக வி.அகரம் கிராமத்தின் முன்னாள் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி தற்போது விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் உதவி இயக்குநராக உள்ள (தணிக்கைப் பிரிவு) மோகன் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா்.

அப்போது, உயா் அலுவலா்கள் வற்புறுத்தியதன்பேரில் கோப்புகளில் கையொப்பமிட்டதாகவும், தனக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனக் கூறி, அரசுத் தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தாா். இதையடுத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்.24) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, 25-ஆவது சாட்சியாக ஆஜரான ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் கணபதியும் பி சாட்சியமளித்திருந்தாா். இந்த வழக்கில் சாட்சியங்களாக சோ்க்கப்பட்ட 67 பேரில் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை 26 பேரிடம் சாட்சியம் பெறப்பட்ட நிலையில், 22 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com