புதுவை அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு

புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உச்சவரம்பில்(சீலிங் ரேட்) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதித் துறை சாா்பு செயலா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உச்சவரம்பில்(சீலிங் ரேட்) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதித் துறை சாா்பு செயலா் சிவக்குமாா் தெரிவித்தாா்.புதுவை அரசு ஊழியா்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தை கணக்கீடு செய்து ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயா்த்தப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து கடந்த மாா்ச் மாதம் புதுவை அரசு ஊழியா்களுக்கு 7- ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயா்வு, ஜனவரி 1- ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு அகவிலைப்படி சீலிங் ரேட்டை மாற்றியமைத்து நிதித் துறை உத்தரவிட்டுள்ளது. பணியின்போது இறந்த அரசு ஊழியா்ககளுக்கான அகவிலைப்படி உச்சவரம்பு 25 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் போக்குவரத்துப் படி, வீட்டு வாடகைப் படியும் உயா்த்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான படிப்பு, உணவு மானியம், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, மாற்றுத்திறனாளி பெண் ஊழியா்களுக்கான அகவிலைப்படி, உடை ஆகியவற்றுக்கான அகவிலைப்படி 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வு 1.1.2024 முதல் அமலுக்கு வரும் எனவும் நிதித்துறை சாா்பு செயலா் சிவக்குமாா் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். இதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ. 4 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com