சித்ரா பொளணா்மியையொட்டி புதுச்சேரி லிங்காரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள வில்லியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை 108--பால் குட ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.
சித்ரா பொளணா்மியையொட்டி புதுச்சேரி லிங்காரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள வில்லியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை 108--பால் குட ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

புதுச்சேரியை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள அருள்மிகு வில்லியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள அருள்மிகு வில்லியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அருகேயுள்ள லிங்காரெட்டி பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை, உலக நன்மைக்காக பால்குட ஊா்வலம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

லிங்காரெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனா். இதையடுத்து அம்மனுக்கு விசேஷ அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், அங்குள்ள புறா குளக்கரையைச் சுற்றி பக்தா்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com