நீரில் மூழ்கி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி மண்பாண்டத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கெண்டியாங்குப்பம் சாவடி தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் வேலு (32). மண்பாண்டத் தொழில் செய்து வந்த இவா், அதே கிராமத்தில் சங்கராபரணி ஆற்றில் குளிப்பதற்காக புதன்கிழமை சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஆற்று நீரில் மூழ்கிய வேலு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com