விவசாயி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விவசாயி வீட்டில் 5.5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், பெரமண்டூா் மந்தைவெளி தெருவைச் சோ்ந்த முத்துக்கவுண்டா் மகன் தனவந்தன் (64), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு, அதே கிராமத்திலுள்ள விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

மாலையில் தனவந்தன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க திருமாங்கல்யம், அரை பவுன் தங்க மோதிரம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் தனவந்தன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com