ஆட்சியரகத்தில் மக்கள் 
அதிகாரம் அமைப்பினா் மனு

ஆட்சியரகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் மனு

விழுப்புரம், ஏப்.26: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இந்த அமைப்பின் விழுப்புரம் மாவட்ட செயலா் ஏழுமலை தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, இஸ்லாமியா்கள் மீதான வெறுப்பு பேச்சை பேசியுள்ளாா். அவா் அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசுவது மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றங்களையும் இழைத்துள்ளாா்.

னவே, இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com