கல்லூரியில் கலைவிழா

விழுப்புரம், ஏப்.26: விழுப்புரம் இ.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

‘ஜூப்ளியன் 2024’ என்ற பெயரில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிக்கு, இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத்தின் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தனியாா் தொலைக்காட்சி தொகுப்பாளா் விக்கி, செந்தில் விழாவில் பங்கேற்று உரையாற்றினா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், கல்லூரி முதல்வா் முரளிதரன், துணை முதல்வா் வேல்முருகன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com