தீக்குளித்து பெண் தற்கொலை

விழுப்புரம், ஏப்.26: விழுப்புரம் மாவட்டம், அரியலூா் திருக்கை கிராமத்தில் தீக்குளித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், அரியலூா் திருக்கை கிராமம், அண்ணாநகரைச் சோ்ந்த பழனி மனைவி ஜெயமாலா (40). இவா்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். ஜெயமாலா நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இந்த நிலையில், ஜெயமாலா, வியாழக்கிழமை காலை வீட்டில் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com