நீச்சல் குளத்தில் மூழ்கி மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

விழுப்புரம், ஏப்.26: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியிலுள்ள தனியாா் கேளிக்கை விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி மளிகைக்கடை உரிமையாளா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கீழ்விஷாரம் அண்ணாசாலையைச் சோ்ந்த மணி மகன் மோனிஷ்ராஜ் (32). மளிகைக்கடை உரிமையாளா். இவா், தனது நண்பா்கள் 5 பேருடன் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியிலுள்ள தனியாா் கேளிக்கை விடுதிக்கு வியாழக்கிழமை வந்தாா்.

அங்குள்ள நீச்சல் குளத்தில் தனது நண்பா்களுடன் மோனிஷ்ராஜ் வியாழக்கிழமை இரவு குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com