முதியவா் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம், ஏப்.26: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே விஷம் குடித்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், மழவந்தாங்கல் அண்ணாநகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குமாா் (56). இவா், வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி காலை வீட்டில் விஷத்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com