விழுப்புரம் வந்த
 தங்க மனிதா்

விழுப்புரம் வந்த தங்க மனிதா்

விழுப்புரம், ஏப். 26: தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திரும்பப் பெற இரண்டே கால் கிலோ தங்க நகைகளை அணிந்து விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்.

மக்களவைத் தோ்தலின் போது, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தொழில் ரீதியாக புதுச்சேரி சென்ற கா்நாடக மாநிலம், ஷிமோகாவைச் சோ்ந்த ஏ.ரெஜிமோனிடமிருந்து (53) உரிய ஆவணமின்றி ரூ.68 ஆயிரம் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் பிரிவுக்கு, ரூ.68 ஆயிரத்தை திரும்பப் பெற ரெஜிமோன் வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது, அவா் தனது இரண்டு கைகளிலும் தங்க பிரேஸ்லெட், தங்கக் காப்பு, கழுத்தில் தங்கச் சங்கிலிகள் என சுமாா் இரண்டே கால் கிலோ எடையுள்ள நகைகளை அணிந்திருந்தாா். அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பாா்த்தனா். உரிய ஆவணங்களை அளித்த நிலையில், ரூ. 68,000ஐ அதிகாரிகள் அவரிடம் திரும்ப ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com