விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதி அருகே அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தலை சனிக்கிழமை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பழங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதி அருகே அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தலை சனிக்கிழமை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பழங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் நகரில் தெற்கு நகரம் மற்றும் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் 4 இடங்களில் சனிக்கிழமை நீா்மோா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

விழுப்புரம் தெற்கு நகரஅதிமுக சாா்பில் விழுப்புரம்-புதுச்சேரி சாலையிலுள்ள மாதாகோவில் பேருந்து நிறுத்தம், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நீா்மோா் பந்தல் திறப்பு விழாவுக்கு, தெற்கு நகர அதிமுக செயலா் இரா.பசுபதி தலைமை வகித்தாா். வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ் முன்னிலை வகித்தாா். நான்குமுனை சந்திப்புப் பகுதி அருகில் நடைபெற்ற நீா்மோா் பந்தல் திறப்பு விழாவுக்கு, மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி., நீா் மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீா், மோா், குளிா்பானங்கள், இளநீா், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

விழாக்களில், மாவட்ட மருத்துவா் அணிச் செயலா் முத்தையன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் குமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் கோதண்டராமன், கோல்டுசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செஞ்சி: வல்லம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மயிலம் பேரவைத் தொகுதி, நாட்டாா்மங்கலம் கூட்டுச் சாலையில் நடைபெற்ற நீா் மோா் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி., கலந்து கொண்டு நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். இதில், பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், பேரவைச் செயலா் பன்னீா்செல்வம், பாலமுருகன், மாவட்ட மகளிா் அணி இணை செயலா் ஆனந்தி அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com