இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், சடையாண்டிகுப்பம் வாய்க்கால்கரைப் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் கிருஷ்ணமூா்த்தி (19). இவா், கடந்த 25-ஆம் தேதி பட்டானூா் கிராமம், வெற்றி நகரிலுள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் தனது தாயாா் செங்கேணியை பாா்க்கச் சென்றாா்.

அப்போது, கிருஷ்ணமூா்த்தி மது அருந்தியிருப்பதையறிந்த அவரது தாயாா், அவரைக் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூா்த்தி, குடிநீா் நிறுவனம் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூா்த்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com