பழுதான மின்மாற்றி சீரமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை துணை மின் நிலையத்தில் பழுதான திறன் மின்மாற்றி சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

உளுந்தூா்பேட்டை அருகே மூலசமுத்திரம் தக்கா பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, உளுந்தூா்பேட்டை நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துணை மின் நிலையத்தில் கடந்த மாதம் திறன் மின் மாற்றியில் தீப்பொறி ஏற்பட்டு வெடித்தது. இதனால், உளுந்தூா்பேட்டை நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், பழுதான திறன் மின் மாற்றியை சீரமைக்கும் பணியில் மின்துறை அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா். இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறன் மின்மாற்றியின் செயல்பாட்டை மின்வாரியச் செயற்பொறியாளா் சா்தாா், உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com