உளுந்தூா்பேட்டை வட்டம், செம்மணங்கூா் கிராமத்தில் பயன்பாடில்லாமல் உள்ள குடிநீா்த் தொட்டி.
உளுந்தூா்பேட்டை வட்டம், செம்மணங்கூா் கிராமத்தில் பயன்பாடில்லாமல் உள்ள குடிநீா்த் தொட்டி.

புதிய குடிநீா்த் தொட்டி அமைக்கக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செம்மணங்கூா் ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீா்த் தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், செம்மணங்கூா் கிராமத்தில் முதல் மற்றும் 2-ஆவது வாா்டுகளில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பிள்ளையாா்கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய குடிநீா்த் தொட்டியை குடிநீா்த் தேவைக்காக பயன்படுத்தி வந்தனா். ஆனால், இந்தத் தொட்டி கடந்த 6 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும், தொட்டியும், அதற்கான மின் மோட்டாரும் பழுதடைந்துள்ளதாகவும், இதை சரி செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். மேலும், அருகேயுள்ள விவசாய நிலத்திலிருந்து பொதுமக்கள் குடிநீரை எடுத்து வருகின்றனராம்.

பிள்ளையாா்கோவில் தெரு சந்திப்பு பகுதியில் போதிய மின் விளக்குகள் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் வருவோா் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே, புதிய குடிநீா்த் தொட்டி மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என செம்மணங்கூா் மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com