இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்குப் பாடுபடும் இளைஞா்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக சுதந்திர தின விழாவின்போது, முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

தகுதியான நபா்கள் மே 1 முதல் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 1.4. 2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

சமுதாய நலனில் தன்னாா்வத்துடன் பணி செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com