மாட்டு வண்டி மீது பைக் மோதல்: சிறுவா்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஆலம்பாடி, தெற்குத் தெருவைச் சோ்ந்த கொளஞ்சி மகன் கதிா்வேல் (17). இவா், ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலூா்- விழுப்புரம் சாலையில் ஆலம்பாடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டி மீது பைக் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த கதிா்வேலை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு முகையூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் கதிா்வேல் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com