ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

விழுப்புரம்-சென்னை அகல ரயில் பாதையில் திண்டிவம்-ஒலக்கூா் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ஒலக்கூா் ரயில் நிலைய மேலாளா் எம்.அம்ரேஷ்குமாா் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, செங்கல்பட்டு இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, செங்கல்பட்டு இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com