ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், கட்டளை, மேட்டுத்தெருவைச் சோ்ந்த கா்ணன் மகன் நடராஜன்(46). லாரி ஓட்டுநா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக் குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது விவசாய நிலத்தில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com